/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாம்பாக்கம் சந்திப்பு சாலை அகலப்படுத்த வலியுறுத்தல் மாம்பாக்கம் சந்திப்பு சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
மாம்பாக்கம் சந்திப்பு சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
மாம்பாக்கம் சந்திப்பு சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
மாம்பாக்கம் சந்திப்பு சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2025 09:10 PM
திருப்போரூர்:மாம்பாக்கம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க, சாலையை அகலப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது. இந்த சந்திப்பு சாலையை ஒட்டி, அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த சந்திப்பு சாலையின் கிழக்கில், ஓ.எம்.ஆர்., -- -இ.சி.ஆர்., செல்லும் சாலை உள்ளது. மேற்கில் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் செல்லும் சாலைகள் உள்ளன. வடக்கில் மேடவாக்கம் செல்லும் சாலை, தெற்கில் காயார் செல்லும் சாலைகள் உள்ளன.
இதில், மேடவாக்கம் மற்றும் காயார் சாலைகளில் திரும்பிச் செல்லும் பகுதி, குறுகியதாக உள்ளது. இதனால், வாகனங்கள் திரும்பும் போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழியில்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, கனரக வாகனங்கள் திரும்பிச் செல்லும் போது, போதிய வழியில்லாமல் விபத்தில் சிக்குகின்றன. அந்த நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் தேங்கி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மாம்பாக்கம் சந்திப்பில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.