Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

ADDED : செப் 10, 2025 08:11 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், நளை மறுதினம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியம், எஸ்.எல்.ஆர்.எம்., சுய உதவிக்குழு ஆகியவற்றுடன், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், நளை மறுதினம்காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்.

வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை. தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044- 2742 6020, 94868 70577 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us