Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போலீஸ் பணி எழுத்து தேர்வு நாளை பயிற்சி வகுப்பு

போலீஸ் பணி எழுத்து தேர்வு நாளை பயிற்சி வகுப்பு

போலீஸ் பணி எழுத்து தேர்வு நாளை பயிற்சி வகுப்பு

போலீஸ் பணி எழுத்து தேர்வு நாளை பயிற்சி வகுப்பு

ADDED : செப் 10, 2025 10:07 PM


Google News
செங்கல்பட்டு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை போலீஸ்காரர், சிறை போலீஸ்காரர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு, செங்கல்பட்டில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை போலீஸ்காரர், இரண்டாம் நிலை சிறை போலீஸ்காரர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இத்தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற

இணையதளத்தில்,'ஆன்லைன்' மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் 21ம் தேதிக்குள், இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு, 044- 2742 6020 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us