Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சுய வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 11, 2025 10:18 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வாயிலாக, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன், முன்னோடி வங்கிகள் வாயிலாக, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை தவிர 37 மாவட்டங்களில், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி மையங்களில், வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள மொபைபோன் பழுது நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சி எவ்வித கட்டணமும் இல்லாமல், 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட, கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான அட்டவணை, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில், கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு, செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் மஹாலட்சுமி நகரில் உள்ள, ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, 88837 35122- 99528 95417 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us