/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கனிமங்களை எடுத்து செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம் கனிமங்களை எடுத்து செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம்
கனிமங்களை எடுத்து செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம்
கனிமங்களை எடுத்து செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம்
கனிமங்களை எடுத்து செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம்
ADDED : ஜூன் 11, 2025 10:55 PM
செங்கல்பட்டு:அனைத்து வகை கனிமங்களையும், கனிம சேமிப்புக் கிடங்கிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும்,'இ டிரான்ஸ்சிஸ்ட் பாஸ்' எனும் மாற்று நடைச் சீட்டுகளை, 'ஆன்லைன்' வாயிலாக வழங்கும் நடைமுறை, வரும் 14ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, ஆன்லைனில் இசைவாணை சீட்டு வழங்கும் நடைமுறை, 2024 செப்., முதல் அமலில் உள்ளது.
மேலும், ஆன்லைனில் நடைச் சீட்டு வழங்கும் நடைமுறை, கடந்த பிப்ரவரி முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து வகை கனிமங்களையும், கனிம சேமிப்புக் கிடங்கிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் மாற்று நடைச்சீட்டுகளை, ஆன்லைன் வாயிலாக வழங்கும் நடைமுறை, வரும் 14ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே, கனிம குத்தகைதாரர்கள் மற்றும் கனிம சேமிப்புக் கிடங்கு உரிமையாளர்கள் அனைவரும் www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, மாற்று நடைச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், அனுமதியின்றி இயங்கும் கனிம இருப்பு கிடங்குகளை, கனிம வினியோகஸ்தர்கள் விதிகள் 2011ன் கீழ் பதிவு செய்து, உரிய நடைச்சீட்டு பெற வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.