/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல் 6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்
6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்
6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்
6 கிலோ உயர் ரக கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்
ADDED : செப் 03, 2025 10:39 PM
தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தில், நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் சோதனை நடத்தினர்.
அதில், ஒரு பை கேட்பாரற்று இருந்தது. அந்த பையில், 6 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய்.
கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.