/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் வருவாய் துறை போராட்டம் பிசுபிசுப்பு செங்கையில் வருவாய் துறை போராட்டம் பிசுபிசுப்பு
செங்கையில் வருவாய் துறை போராட்டம் பிசுபிசுப்பு
செங்கையில் வருவாய் துறை போராட்டம் பிசுபிசுப்பு
செங்கையில் வருவாய் துறை போராட்டம் பிசுபிசுப்பு
ADDED : செப் 03, 2025 10:37 PM
செங்கல்பட்டு:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்த போராட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைவானோர் பங்கேற்றதால், போராட்டம் பிசுபிசுத்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று போராட்டம் நடந்தது.
இதில், வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் பணிச்சுமை ஏற்பட்டு வருகிறது. இது போன்று பல்வேறு பணிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை, தொடர்ந்து தமிழக அரசு புறக்கணிக்கிறது.
இவ்வாறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய்த் துறையினர் 1,411 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் போராட்டத்தில், வருவாய்த்துறை ஊழியர்கள் 220 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய்த்துறை போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.