/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் காய வைக்கப்படும் எள் செடிகளால் விபத்து அபாயம் சாலையில் காய வைக்கப்படும் எள் செடிகளால் விபத்து அபாயம்
சாலையில் காய வைக்கப்படும் எள் செடிகளால் விபத்து அபாயம்
சாலையில் காய வைக்கப்படும் எள் செடிகளால் விபத்து அபாயம்
சாலையில் காய வைக்கப்படும் எள் செடிகளால் விபத்து அபாயம்
ADDED : செப் 04, 2025 02:29 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள்கோவில் - அனுமந்தபுரம் சாலையில் எள் செடிகள் காய வைக்கப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள்கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., உடையது. திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையான இச்சாலையை கொண்டமங்கலம், சென்னேரி, அனுமந்தபுரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில், கொண்டமங்கலம் பகுதியில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த எள் செடிகளை சாலையில் கொட்டி காயவைக்கின்றனர். பின் அவற்றை மாலையில் ஒன்றாக குவித்து, தார்ப்பாய் போட்டு மூடி வைக்கின்றனர்.
சாலையில் மற்ற வாகனங்கள் வரும் போது தெரியாதபடி, இந்த எள் செடி குவியல் மறைக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.