/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை 12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை
12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை
12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை
12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 02, 2025 11:56 PM
மறைமலை நகர், வேலுார் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். கடந்த ஒரு மாதமாக மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி, டீ கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மகன் விஜயராகவன், 12, ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விஜயராகவன், தன் அறையில் துாங்க சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாக விஜயராகவன் கதவை திறக்காததால், சுரேஷ் குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, விஜயராகவன் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், விஜயராகவன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.