ADDED : ஜூலை 23, 2024 01:22 AM

ஸ்ரீபெரும்புதுார், கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனந்து, 21; இவர், நேற்று முன்தினம் மாலை, தண்டலம் பகுதியில் உள்ள பெருமாங்களணி குளத்தில், நண்பர்களுடன் குளித்தார். அப்போது, அனந்து திடீரென குளத்தில் மூழ்கி மாயமானார்.
நண்பர்கள் தேடியும் கிடைக்காத நிலையில், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத் துறை வீரர்கள், தண்ணீரில் மூழ்கிய அனந்துவை சடலமாக மீட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.