ADDED : ஜூலை 23, 2024 01:23 AM
சென்னை, சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை, வீட்டு வாசலில் பெருக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு போதையில் வந்த மர்ம நபர், சிறுமியின் கையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது அண்ணன் வெளியில் வரவும் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து, அயனாவரம்அனைத்து மகளிர்போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் ஓட்டேரியைச் சேர்ந்த வசந்த்குமார், 21, என்பது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.