/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு
பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு
பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு
பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 23, 2024 01:22 AM

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
குழாய் பதிக்கப்பட்ட இடங்களில், பள்ளத்தை சரியாக மூடாததால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
இந்த நிலையில், பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், நேற்று காலை சென்ற சிலிண்டர் லோடு லாரி, பம்மல் மண்டல அலுவலகம் அருகே, சரியாக மூடாத பள்ளத்தில் சிக்கி, சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில், முக்கால் மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெகநாதன் ஆகியோர் இணைந்து, இரண்டு கிரேன், இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்களை வரவழைத்து, பள்ளத்தில் சிக்கிய லாரியை துாக்கினர்.
இதையடுத்து, வாகன போக்குவரத்து சீரானது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.