/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
ADDED : ஜூன் 24, 2024 06:07 AM
மறைமலை நகர்,: மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரத்தில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் அனைத்திலும், முதியவர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பை சேர்ந்தவர் சாந்தி, 77. இவர், நேற்று முன்தினம் தனது பீரோவை பார்வையிட்ட போது, அதில் இருந்த ஒரு தங்க பிஸ்கட் மற்றும் 24 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசில், சாந்தி புகார் அளித்தார். அதன்படி, சாந்தி வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தினர்.
சாந்தி வீட்டில் வேலை செய்து வந்த கருநிலம் கிராமத்தை சேர்ந்த பவித்ரா, 24, என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், பவித்ரா தினமும் வீட்டு வேலை செய்ய வரும் போது, சிறுகச்சிறுக தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பவித்ரா வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த தங்க பிஸ்கட் மற்றும் 24 சவரன் தங்க நகைகளை மீட்டு, பவித்ராவை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.