/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டூ - வீலரில் கார் மோதி வாலிபர் பலி டூ - வீலரில் கார் மோதி வாலிபர் பலி
டூ - வீலரில் கார் மோதி வாலிபர் பலி
டூ - வீலரில் கார் மோதி வாலிபர் பலி
டூ - வீலரில் கார் மோதி வாலிபர் பலி
ADDED : ஜூன் 24, 2024 06:06 AM
மறைமலை நகர்: சென்னை, ராமாபுரம் மஹாலட்சுமி நகரை சேர்ந்தவர் மனோஜ், 22. மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, வேலை முடித்து, வீட்டிற்கு தனது 'யமஹா ப்பேஷர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மறைமலை நகர் ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்ற போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற 'ஸ்விப்ட்' கார் மோதியதில், மனோஜ் தலை மற்றும் கால்களில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மனோஜ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, மனோஜ் தந்தை பாலன் கொடுத்த புகாரின்படி, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.