/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
ADDED : ஜூலை 09, 2024 11:21 PM

சித்தாமூர்:சித்தாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.
அதிகப்படியாக நெல் பயிரிடப்படும். சித்தாமூர் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக, தொன்னாடு ஊராட்சியில், 62.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த பிப்., மாதம் துவங்கப்பட்டது.
சம்பா பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், போதிய நெல் வரவு இல்லாததால், கடந்த மாதம் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.
தற்போது, சொர்ணவாரி அறுவடை துவங்கி உள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
நெல்லை பாதுகாக்க இடவசதி இல்லாத விவசாயிகள், தங்கள் நெல்லை விற்பனை செய்ய, தனியார் வியாபாரிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், தொன்னாடு நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.