/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேதகிரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் வேதகிரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம்
வேதகிரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம்
வேதகிரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம்
வேதகிரீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம்
ADDED : ஜூலை 09, 2024 11:20 PM
திருக்கழுக்குன்றம்:சைவ சமயக் குரவர் என போற்றப்பட்ட நான்கு பேரில், மாணிக்கவாசகர் ஒருவர். மதுரை திருவாதவூரில் பிறந்த அவர், சிவபெருமானை போற்றி திருவாசகம் பாடினார். கடலுார் அருகேயுள்ள சிதம்பரத்தில் மறைந்தார்.
சிவபெருமான் கோவில்களில், அவர் மறைந்த ஆனி மாத மகம் நட்சத்திர நாளில், அவருக்கு குருபூஜை வழிபாடு நடத்தப்படும்.
நேற்று இந்நாளை முன்னிட்டு, வேதகிரீஸ்வரர் கோவிலில் தனி சன்னிதியில் வீற்றுள்ள மாணிக்கவாசகருக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. திருவாசகம் முற்றோதி, வீதியுலா நடந்தது.
சிவனடியார் திருக்கூட்ட குழுவினர், நேற்று முன்தினம், வேதமலை அடிவார மண்டபத்தில், விநாயகர் வழிபாடு, திருமுறை இன்னிசை நடத்தினர். பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன் அலங்கார சேவையாற்றினார்.
நேற்று திருமுறைகள் அர்ச்சனை, கோவில் திருப்படிகளை வழிபட்டு. திருவாசகம் முற்றோதி மலையேறி, வேதகிரீஸ்வரரை வழிபட்டனர். கிரிவலம் சென்றனர். இன்று காலையும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.