/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புத்துார் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா? புத்துார் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
புத்துார் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
புத்துார் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
புத்துார் சமுதாய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : ஜூன் 24, 2024 05:56 AM

சித்தாமூர்: சித்தாமூர் அருகே உள்ள புத்துார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிவாசிகள், இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, 15வது நிதிக்குழு மானிய ஊராட்சி நிதியில் இருந்து, 6.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு சமுதாய சுகாதார கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக, தண்ணீர் வசதி இல்லாமல், சமுதாய சுகாதார கழிப்பறை செயல்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது.
எனவே, சுகாதார கழிப்பறை வளாகம் இருந்தும், பகுதிவாசிகள் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சமுதாய சுகாதார கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.