/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ முகப்பு கண்ணாடி உடைந்து அரசு பேருந்து சேதம் முகப்பு கண்ணாடி உடைந்து அரசு பேருந்து சேதம்
முகப்பு கண்ணாடி உடைந்து அரசு பேருந்து சேதம்
முகப்பு கண்ணாடி உடைந்து அரசு பேருந்து சேதம்
முகப்பு கண்ணாடி உடைந்து அரசு பேருந்து சேதம்
ADDED : ஜூன் 24, 2024 05:55 AM

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு, நேற்று காலை அரசுப் பேருந்து சென்றது. திருக்கழுக்குன்றம், கொத்திமங்கலம் பகுதிகளில் பயணியரை இறக்கி ஏற்றி, புலிக்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகில், 6:25 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, முகப்பு காற்று தடுப்பு கண்ணாடி, எதிர்பாராதவிதமாக முழுதும் உடைந்து, சாலையில் சிதறியது. ஓட்டுனர் பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தினார்.
அவரது கைகளில், கண்ணாடி சிதறல் குத்தி சிராய்ப்பு ஏற்பட்டது. பயணியர் காயமின்றி தப்பினர். உடனே, பயணியரை பேருந்தில் இருந்து இறக்கிய நடத்துனர், அவ்வழியாக வந்த வேறு பேருந்தில் ஏற்றி மாமல்லபுரத்திற்கு அனுப்பி வைத்தார். காற்று அழுத்தம் அதிகமானதால், கண்ணாடி உடைந்து சேதமானதாக, நடத்துனர் தெரிவித்தார்.