/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரியில் கழிவுநீர் தேக்கம் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதி கூடுவாஞ்சேரியில் கழிவுநீர் தேக்கம் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதி
கூடுவாஞ்சேரியில் கழிவுநீர் தேக்கம் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதி
கூடுவாஞ்சேரியில் கழிவுநீர் தேக்கம் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதி
கூடுவாஞ்சேரியில் கழிவுநீர் தேக்கம் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜூன் 24, 2024 05:57 AM

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பூங்கா தெரு, என்.ஜி.ஓ., காலனியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பூங்கா தெருவில், கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது. அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த தெருவில் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. அங்கு வருகை தரும் பொது மக்களுக்கும், கர்ப்பிணியருக்கும், தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது.
எனவே, தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி, கழிவு நீர் கால்வாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.