/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 100 நாள் வேலை வழங்கக்கோரி சித்தாமூரில் காத்திருப்பு போராட்டம் 100 நாள் வேலை வழங்கக்கோரி சித்தாமூரில் காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை வழங்கக்கோரி சித்தாமூரில் காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை வழங்கக்கோரி சித்தாமூரில் காத்திருப்பு போராட்டம்
100 நாள் வேலை வழங்கக்கோரி சித்தாமூரில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 17, 2024 01:09 AM

சித்தாமூர், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துார் ஊராட்சியில், பள்ளம்பாக்கம், தாமரைக்கேணி, தேன்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிற ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தில் வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொளத்துார் ஊராட்சிக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த வாரம் அப்பகுதிவாசிகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுஅளித்தனர்.
ஆனால், தற்போது வரை வேலை வழங்க நடவடிக்கை எடுக்காததால்,நுாற்றுக்கும் மேற்பட்டோர், காலை 11:30 மணிக்கு, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாலை 3:00 மணிக்கு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்சீனுவாசன், சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ஏழுமலை ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அதில், உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அப்பகுதிவாசிகள்போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.