/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போக்கு கால்வாய் இல்லாமல் கழிவுநீர் கால்வாய் அமைப்பு போக்கு கால்வாய் இல்லாமல் கழிவுநீர் கால்வாய் அமைப்பு
போக்கு கால்வாய் இல்லாமல் கழிவுநீர் கால்வாய் அமைப்பு
போக்கு கால்வாய் இல்லாமல் கழிவுநீர் கால்வாய் அமைப்பு
போக்கு கால்வாய் இல்லாமல் கழிவுநீர் கால்வாய் அமைப்பு
ADDED : ஜூலை 17, 2024 04:06 PM

கூடுவாஞ்சேரி:
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட நந்திவரம் பெரியார் நகர் எட்டாவது தெருவில், நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல, அப்பகுதியில் போக்கு கால்வாய் இல்லை. அதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் வந்து, தெருவில் வழிந்தோடுகிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பெரியார் நகர், எட்டாவது தெருவில் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு போக்கு கால்வாய் அமைக்கப்படாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயிலேயே தேங்கி, மீண்டும் அருகில் உள்ள தெருக்களுக்கும், வீடுகளுக்கும் செல்கிறது.
இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவு நீர் கால்வாயை போக்கு கால்வாயுடன் இணைத்து, பணிகளை நிறைவு செய்ய, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.