/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில் வண்டலுார் பாதை திறப்புக்கு தயார் பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில் வண்டலுார் பாதை திறப்புக்கு தயார்
பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில் வண்டலுார் பாதை திறப்புக்கு தயார்
பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில் வண்டலுார் பாதை திறப்புக்கு தயார்
பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில் வண்டலுார் பாதை திறப்புக்கு தயார்
ADDED : ஜூன் 12, 2024 01:21 AM

பெருங்களத்துார்:பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் வண்டலுார் மார்க்கமான பாதை தயாராகி உள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை- -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- ரயில்வே நிர்வாகம் இணைந்து, 234 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- -- தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022ல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து, புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதை திறக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகள் துவங்கின. தேர்தல் நேரத்தில் மந்தமாக நடந்து வந்த பணிகள், தற்போது வேகமெடுத்து இரவு, பகலாக நடந்து வருகின்றன.
தற்போது, 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பெருங்களத்துாரில் இருந்து மேம்பாலத்தில் ஏறும் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்ததும், வண்டலுார் மார்க்கமாக இறங்கும் பாதை அமைக்க வேண்டியுள்ளது.
ஒரு வாரத்தில் இப்பணியை முடிந்து, வண்டலுார் மார்க்கமான பாதையை பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.