Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு

செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு

செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு

செங்கையில் இன்று ஜமாபந்தி துவக்கம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு

ADDED : ஜூன் 12, 2024 01:20 AM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று 12ம் தேதி, ஜமாபந்தி நிகழ்ச்சியை, கலெக்டர் அருண்ராஜ், இன்று துவக்கி வைக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 1433ம் பசலி வருவாய் தீர்வாய ஜமாபந்தி, எட்டு தாலுகாக்களிலும், இன்று காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.

இதில், பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், தொடர் பிரச்னைகள் குறித்து, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

செங்கல்பட்டு


செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், ஜமாபந்தி இன்று துவங்குகிறது. இதில், செங்கல்பட்டு குறுவட்டத்தைச் சேர்ந்தோர் பங்கேற்கலாம்.

பாலுார் மற்றும் காட்டாங்கொளத்துார் குறுவட்டங்களுக்கு 14ம் தேதியும், சிங்கபெருமாள் கோவில் குறுவட்டத்திற்கு 18ம் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது.

வண்டலுார்


வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில், வண்டலுார் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி இன்று துவங்குகிறது. கூடுவாஞ்சேரி குறுவட்டத்திற்கு 13ம் தேதியும், மாம்பாக்கம் குறுவட்டத்திற்கு 14ம் தேதியும் நடக்கிறது.

திருப்போரூர்


திருப்போரூர் தாலுகா, திருப்போரூர், நெல்லிக்குப்பம் குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி, சப் -- கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், இன்று துவங்குகிறது.

கரும்பாக்கம் குறுவட்டத்திற்கு 14ம் தேதியும், கேளம்பாக்கம் குறுவட்டத்திற்கு 18ம் தேதியும், மானாமதி குறுவட்டத்திற்கு 19ம் தேதியும், பையனுார் குறுவட்டத்திற்கு 20ம் தேதியும் நடக்கிறது.

திருக்கழுக்குன்றம்


திருக்கழுக்குன்றம் தாலுகா, மாமல்லபுரம் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, செங்கல்பட்டு கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு தலைமையில், இன்று துவங்குகிறது. நாளையும் தொடர்கிறது.

திருக்கழுக்குன்றம் குறுவட்டத்திற்கு, நாளை மற்றும் 14, 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது. நெரும்பூர் குறுவட்டத்திற்கு, 19, 20ம் தேதிகளிலும், பொன்விளைந்தகளத்துார் குறுவட்டத்திற்கு, 21, 25 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

மதுராந்தகம்


மதுராந்தகம் தாலுகா, ஒரத்தி, அச்சிறுபாக்கம் குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமையில், இன்று துவங்குகிறது.

அச்சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு 14ம் தேதியும், பெரும்பாக்கம், எல்.எண்டத்துார் குறுவட்டங்களுக்கு, 18ம் தேதியும், எல்.எண்டத்துார் குறுவட்டத்திற்கு 19ம் தேதியும் நடக்கிறது.

வையாவூர் குறுவட்டத்திற்கு, 20, 21 ஆகிய தேதிகளிலும், கருங்குழி குறுவட்டத்திற்கு 25ம் தேதியும், மதுராந்தகம் குறுவட்டத்திற்கு 26ம் தேதியும் நடக்கிறது.

அதேபோல், ஜமீன்எண்டத்துார் குறுவட்டத்திற்கு 27ம் தேதியும், ஓணம்பாக்கம் குறுவட்டத்திற்கு 28ம் தேதியும் நடக்கிறது.

செய்யூர்


செய்யூர் தாலுகா, சித்தாமூர் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமையில், இன்று துவங்கி, நாளை வரை நடக்கிறது.

சூணாம்பேடு குறுவட்டத்திற்கு நாளையும், 14ம் தேதியும் நடக்கிறது. கடப்பாக்கம் குறுவட்டத்திற்கு, 18ம் தேதியும், கயப்பாக்கம், கொடூர் குறுவட்டங்களுக்கு 20ம் தேதியும் நடக்கிறது.

கொடூர் குறுவட்டத்திற்கு 21ம் தேதியும், லத்துார், செய்யூர் குறுவட்டங்களுக்கு, 25, 26ம் தேதிகளிலும் நடக்கிறது. செய்யூர் குறுவட்டத்திற்கு, 27ம் தேதியும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்


தாம்பரம் தாலுகா, தாம்பரம், சிட்லபாக்கம் குறுவட்டங்களுக்கு, செங்கல்பட்டு தனித்துணை ஆட்சியர் ஜோதிசங்கர் தலைமையில், இன்று ஜமாபந்தி துவங்குகிறது.

சிட்லபாக்கம் குறுவட்டத்திற்கு நாளையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேடவாக்கம் குறுவட்டத்திற்கு 14ம் தேதி நடக்கிறது.

பல்லாவரம்


பல்லாவரம் தாலுகா, பல்லாவரம் குறுவட்டத்திற்கு, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ்பாபு தலைமையில், இன்று ஜமாபந்தி துவங்குகிறது. பம்மல் குறுவட்டத்திற்கு, நாளை ஜமாபந்தி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us