/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெருவேலி தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள் பெருவேலி தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
பெருவேலி தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
பெருவேலி தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
பெருவேலி தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 12, 2024 01:22 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பொலம்பாக்கத்தில் இருந்து பெருவேலி கிராமத்திற்கு செல்லும் தார்சாலையில், ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும், 50 மிட்டர் நீளமுடைய தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க, தரைப்பாலத்தின் இரண்டு ஓரங்களிலும் துாண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
தரைப்பாலம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், நாளடைவில் தடுப்பு துாண்கள் அனைத்தும் சேதமடைந்து, தற்போது தடுப்பு இல்லாத தரைப்பாலமாக காட்சியளிக்கிறது.
மேலும், தரைப்பாலம் உள்ள பகுதியில், மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தரைப்பாலத்தில் தடுப்பு துாண்கள் அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.