/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கார் மீது லாரி மோதி விபத்து படாளத்தில் இருவர் பலி கார் மீது லாரி மோதி விபத்து படாளத்தில் இருவர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து படாளத்தில் இருவர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து படாளத்தில் இருவர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து படாளத்தில் இருவர் பலி
ADDED : ஜூன் 07, 2024 11:36 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில், கார் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 33. இவர், நேற்று முன்தினம் இரவு, தனது குடும்பத்தினருடன் திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி, மாருதி எர்டிகா காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நேற்று அதிகாலை 01:30 மணியளவில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், படாளம் கூட்டு சாலை அருகே வந்த போது, திருச்சியிலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, கேரட் லோடு ஏற்றி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த இருவர், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாடாளம் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது பார்வதி, 70, சச்சின், 7, என தெரிந்தது.
படுகாயம் அடைந்தவர்கள், அதே குடும்பத்தைச் சேர்ந்த ரமணி, 52, சாந்தி, 50, வினோத், 33, புவனா, 30, மற்றும் சிப்பிகா, 3, எனவும் தெரிய வந்தது.
இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.