/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்களால் அவதி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்களால் அவதி
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்களால் அவதி
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்களால் அவதி
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்களால் அவதி
ADDED : ஜூன் 07, 2024 11:31 PM

செய்யூர்:செய்யூர் அடுத்த கடப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகே, இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேலும், அலுவலகத்திற்கு அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள்,பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என, தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
வெளியூர்களுக்கு பயணம் செய்ய, கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வருவோர், வீட்டிலிருந்து இருசக்கர வாகனங்கள் வாயிலாக பேருந்து நிறுத்தம் வந்து, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
வெளி வாகனங்கள் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லை; மீறினால் காவல் துறையின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பாக, அலுவலக வளாகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், எதையும் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் தங்களது வாகனங்களை வளாகத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.