/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 28, 2024 02:21 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், தன்னார்வலர்களுக்கு கற்பித்தலுக்கான பயிற்சி முகாம், நேற்று நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில், ''இல்லம் தேடி கல்விதிட்டம் வாயிலாக,படிப்பில் நாட்டம்செலுத்தாதவர்களுக்கு உந்துதலை ஏற்படுத்த முடியும்.அதற்கான பயிற்சியை முறையாக அளிக்கவேண்டும்,” என்றார்.
கருத்தாளர்கள் ரேவதி, தீபன்சான் ஆகியோர் எளிய முறையில்,தமிழ் ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களைகற்பித்தல் குறித்து, செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தனர்.
அதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், 153 மையங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆர்வத்துடன்பங்கேற்று பயிற்சிபெற்றனர்.