/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துணை சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டடம் அமையுமா? துணை சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டடம் அமையுமா?
துணை சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டடம் அமையுமா?
துணை சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டடம் அமையுமா?
துணை சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டடம் அமையுமா?
ADDED : ஜூலை 28, 2024 02:25 AM

அச்சிறுபாக்கம், :அச்சிறுபாக்கம் ஒன்றியம், அனந்தமங்கலம் ஊராட்சியில், 20 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
கர்ப்பிணியருக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, குழந்தை வளர்ச்சி கண்காணித்தல், போலியோ சொட்டு மருந்து முகாம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அப்பகுதி முதியவர்களும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக துணை சுகாதார நிலையம், பயன்பாடின்றி பாழடைந்து வருவதால், தற்காலிகமாக மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், பழைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
எனவே, பழைய கட்டடம் இருந்த பகுதியில், புதிதாக துணை சுகாதார நிலைய கட்டடம் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.