Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மயானத்திற்கு பாதை இல்லாததால் பாபுராயன்பேட்டை மக்கள் அவதி

மயானத்திற்கு பாதை இல்லாததால் பாபுராயன்பேட்டை மக்கள் அவதி

மயானத்திற்கு பாதை இல்லாததால் பாபுராயன்பேட்டை மக்கள் அவதி

மயானத்திற்கு பாதை இல்லாததால் பாபுராயன்பேட்டை மக்கள் அவதி

ADDED : ஜூன் 20, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பாபுராயன்பேட்டை ஊராட்சியில், மயானத்திற்கு உடல்களை கொண்டு செல்ல, நிரந்தர பாதை வசதி இல்லாததால், அப் பகுதிவாசிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் அடுத்த பாபுராயன்பேட்டை ஊராட்சியில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு தலைமுறைகளாக, மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை இல்லாததால், தனிநபர்களுக்கு சொந்தமானவிவசாய நிலத்தின் வழியே, இறந்தோரின் உடல்களை கொண்டு சென்று, மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.

இது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை அமைக்க, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாபுராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, 75, என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, நேற்று தனிநபர்களுக்கு சொந்தமான வயல் வெளி மற்றும் வீட்டுமனைப் பிரிவு பகுதி வழியாக, உறவினர்கள் உடலை எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

ஆகையால், மயானத்திற்கு நிரந்தரமான பாதை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us