/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தடைக்காலம் முடிந்த பின்னும் மீன்வரத்து குறைவால் விரக்தி தடைக்காலம் முடிந்த பின்னும் மீன்வரத்து குறைவால் விரக்தி
தடைக்காலம் முடிந்த பின்னும் மீன்வரத்து குறைவால் விரக்தி
தடைக்காலம் முடிந்த பின்னும் மீன்வரத்து குறைவால் விரக்தி
தடைக்காலம் முடிந்த பின்னும் மீன்வரத்து குறைவால் விரக்தி
ADDED : ஜூன் 20, 2024 12:38 AM

மாமல்லபுரம்:தமிழகத்தில், மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் - ஜூன் மாதங்களில், மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், வங்கக் கடலில் மீன்வளத்தை பெருக்க, ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை, மத்திய அரசு மீன்பிடிக்க தடை விதித்தது.
தடைக்காலம் அண்மையில் முடிந்தது. ஆழ்கடலில் மீன் பிடிக்கவே இத்தடை எனினும், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மீன்பிடியை தவிர்த்தனர். உணவுத் தேவை கருதி, பகுதிதோறும் சிலர், கரையோரம் மட்டும் மீன் பிடித்தனர். தடைக்காலம் முடிந்தும், கடந்த சில நாட்களாக கடலில் மீன்வளம் குறைவாகவே உள்ளதாக, மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் கூறியதாவது:
தடைக்காலத்தில் ஆழ்கடலில் 'லாஞ்ச்' படகு செல்லாது. மீன் அதிகம் இருக்கும். மே மாதம் முதல், ஜூலை வரை, ஆழ்கடலில் இருந்து கரைக்கு, தெற்கு - வடக்கு திசைக்கு நீரோட்டம் இருக்கும்.
ஆழ்கடல் வண்டல் நீர் கரைக்கு வரும்போது, பாறை, சூரை உள்ளிட்ட வகை மீன்கள், கரைப் பகுதியில் அதிகரிக்கும்.
இப்போது, வண்டல் நீர் கரைக்கு வரவில்லை.கடலும் சுரப்பாக உள்ளதால், தற்போது மீன் வரத்து இல்லை. படகிற்கு ஐந்து பேர் சென்றால், 10,000 ரூபாய்க்கு மீன் கிடைத்தால் தான் தொழில் செய்ய முடியும்.
ஆனால், 1,000 ரூபாய்க்குக்கூட மீன் கிடைப்பதில்லை. வலையில் சங்கு சிப்பிகளே சிக்குகின்றன. அதை வலையிலிருந்து சிரமப்பட்டு அகற்றுகிறோம். அதிகளவில் மீன் கிடைக்க, 'மாப்'பிற்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.