/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோவளத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு கோவளத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
கோவளத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
கோவளத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
கோவளத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:36 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், தொண்டு நிறுவனங்கள் சார்பில், 1.23 கோடி ரூபாய் செலவில், புதிதாகநான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடம், நவீன கழிப்பறை அமைக்கப் பட்டது.
இதற்கான திறப்பு விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பார்களாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சி புரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.