/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து துவக்க கோரிக்கை சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து துவக்க கோரிக்கை
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து துவக்க கோரிக்கை
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து துவக்க கோரிக்கை
சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து துவக்க கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2024 01:08 AM

மேல்மருவத்துார்,மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், ஒரத்தி, அனந்தமங்கலம், சூணாம்பேடு, சித்தாமூர், ராமாபுரம் உள்ளிட்ட, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இருந்து செல்லும் பேசஞ்சர் ரயில், விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில், இரு மார்க்கத்திலும் ரயில்கள், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன.
அதனால், வந்தவாசி- - செய்யூர் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே, சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் அமைக்கப்பட்டு உள்ளது.
காலை, மாலை நேரங்களில் தொடர்ச்சியாக ரயில்கள் கடந்த வண்ணம் இருப்பதால், சோத்துப்பாக்கத்தில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுகிறது.
குறைந்தபட்சம், 20 முதல் 30 நிமிடங்கள் வரை ரயில்வே கேட் மூடப்பட்டு இருப்பதால், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், மிகுந்த அவதி அடைகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம், இந்தியா முழுதும் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளுக்கான துவக்க விழாவை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதில், சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பால பணியும் அடங்கியுள்ளது.
ஆனால், துவக்கி வைத்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் சோத்துப்பாக்கம் பகுதியில் ரயில்வே மேம்பால பணி துவக்கப்படாமல் உள்ளது.
இதனால், நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கனரக வாகன ஓட்டிகள் மற்றும் அரசு, தனியார் பேருந்துகள், இருசக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோர் என, பல தரப்பட்ட மக்களும் பாதிப்படைகின்றனர்.
எனவே, சோத்துப்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை, துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து துவக்க வேண்டும் என, வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.