/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தார்ப்பாய் மூடாத கல்குவாரி லாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள் தார்ப்பாய் மூடாத கல்குவாரி லாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
தார்ப்பாய் மூடாத கல்குவாரி லாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
தார்ப்பாய் மூடாத கல்குவாரி லாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
தார்ப்பாய் மூடாத கல்குவாரி லாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : ஜூலை 17, 2024 01:07 AM

செய்யூர், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், நல்லாமூர், ஜமீன்எண்டத்துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன.
கல்குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக, அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து அதிகப்படியான பாரங்கள் ஏற்றிச்செல்வது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்குஅச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், லாரிகளில் பாரம் ஏற்றிச் செல்லும் போது, தார்பாய் போட்டு மூடாமல், திறந்த நிலையில் செல்வதால், லாரிகளை பின் தொடர்ந்து செல்லும் பிற வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லிக்கற்கள் சாலையில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை மனு அளித்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால் விரக்தியடைந்த அப்பகுதிவாசிகள், நேற்று செய்யூர் பஜார் வீதியில் தார்பாய் போட்டு மூடாமல் திறந்தநிலையில் ஜல்லி மற்றும் எம் - சாண்ட் ஏற்றிச் சென்ற நான்கு லாரிகளை பிடித்து, செய்யூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நான்கு வாகனங்களுக்கும், தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து, அதன் பின் அவற்றை போலீசார்விடுவித்தனர்.