/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுதாமூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா? சிறுதாமூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சிறுதாமூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சிறுதாமூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சிறுதாமூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 17, 2024 01:07 AM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே சிறுதாமூர் கிராமத்தில்,25 ஆண்டுகளுக்கு முன், அனந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ்,கூட்டுறவு ரேஷன்கடைக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்த ரேஷன் கடையால், சிறுதாமூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றனர்.
தற்போது, விரிசல்ஏற்பட்டு, ரேஷன் கடை கட்டடம் பாழடைந்து பழமையானதால், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பாதுகாப்பதில் பெரும்சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்காலிகமாக மகளிர் குழு கட்டடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது.
எனவே, பழையகூட்டுறவு ரேஷன் கடை கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே பகுதியில்புதிதாக கட்டடம் கட்டித்தர, துறை சார்ந்தஅதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.