ADDED : ஜூலை 17, 2024 01:00 AM
பல்லாவரம், பல்லாவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், கன மழை பெய்யும் போது அப்பகுதியில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கி, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
அப்போது, இக்கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை எடுத்து, சீரமைத்தனர். இதை முழுதுமாக துார்வாரி,சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.