Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

ADDED : ஜூலை 18, 2024 09:32 PM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம்:கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம், கூவத்துார் ஆகிய பகுதிகளில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், போதுமான வகுப்பறை கட்டடங்கள் இன்றி, மாணவ - மாணவியர் சிரமப்பட்டனர்.

அதனால், கூடுதல் வகுப்பரை கட்டடம் கட்டக்கோரி, அரசிடம் பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, நபார்டு திட்டத்தின்கீழ், வெங்கப்பாக்கம் பள்ளியில், 85.44 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

கூவத்துார் பள்ளியில், 63.54 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

அவற்றின் திறப்பு விழா, நேற்று நடந்தது. செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு அவற்றை திறந்து வைத்தார்.

அதேபோல், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்து இருந்ததால், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

அதன்படி, பள்ளையை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை சார்பில், நபார்டு வங்கி நிதி உதவியுடன், 85.44 லட்சம் ரூபாய் பதிப்பில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன.

அவற்றுக்கான திறப்பு விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us