/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
நீர்த்தேக்க தொட்டி சேதம் இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 09:31 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 15வது வார்டுக்கு உட்பட்ட வஜ்ஜிராபுரம் சாலையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இத்தொட்டிக்கு, கிணற்றில் இருந்து நீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, சேதம் அடைந்து உள்ளது. அதனால் அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டி அதிகமான உயரத்தில் இருப்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், பாழான நிலையில் உள்ள தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.