/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று பால்குட திருவிழா ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று பால்குட திருவிழா
ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று பால்குட திருவிழா
ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று பால்குட திருவிழா
ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று பால்குட திருவிழா
ADDED : ஜூலை 18, 2024 09:39 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் அழகாம்பிகை உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலில், 42ம் ஆண்டு பால்குட திருவிழா, இன்று நடைபெறுகிறது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு மங்கள இசை, 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், 108 பால் குடங்களுக்கு வேள்வி பூஜைகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 10:00 மணிக்கு, ஜம்புகேஸ்வர சுவாமிக்கு 108 குடம் விபூதி அபிஷேகமும், அழகாம்பிகை அம்மனுக்கு, 108 குடம் பாலாபிஷேகமும் நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத் துறை மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.