/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நெடுங்குன்றம் ஊராட்சி மின் மோட்டார் பழுது நெடுங்குன்றம் ஊராட்சி மின் மோட்டார் பழுது
நெடுங்குன்றம் ஊராட்சி மின் மோட்டார் பழுது
நெடுங்குன்றம் ஊராட்சி மின் மோட்டார் பழுது
நெடுங்குன்றம் ஊராட்சி மின் மோட்டார் பழுது
ADDED : ஜூன் 07, 2024 07:56 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு, திருவள்ளுவர் தெரு, அஞ்சுகம் நகர், வரபிரசாத் நகர் ஆகிய பகுதிகளுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
அங்குள்ள மின் மோட்டார் பழுது காரணமாக, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
அதனால், ஊராட்சி சார்பில் அவ்வப்போது, டிராக்டர் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பணிக்கு செல்வோர், வயதானோர் டிராக்டரில் குடிநீர் பிடிப்பதற்கு இயலாமல், சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, பழுதான மின் மோட்டாரை சீரமைத்து, எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.