/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நள்ளிரவில் அணையும் தெரு விளக்குகள் செங்கையில் மர்ம நபர்கள் நடமாட்டம்? நள்ளிரவில் அணையும் தெரு விளக்குகள் செங்கையில் மர்ம நபர்கள் நடமாட்டம்?
நள்ளிரவில் அணையும் தெரு விளக்குகள் செங்கையில் மர்ம நபர்கள் நடமாட்டம்?
நள்ளிரவில் அணையும் தெரு விளக்குகள் செங்கையில் மர்ம நபர்கள் நடமாட்டம்?
நள்ளிரவில் அணையும் தெரு விளக்குகள் செங்கையில் மர்ம நபர்கள் நடமாட்டம்?
ADDED : ஜூன் 07, 2024 07:59 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி, ஏழாவது வார்டு, அம்பேத்கர் நகர் பச்சையம்மன் கோவில் பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள தெருக்களில், நகராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, மாலை நேரங்களில் முறையாக நகராட்சி சார்பில் எரிய விடப்படுகின்றன.
இருப்பினும், நள்ளிரவு நேரங்களில் மட்டும், தொடர்ந்து அனைத்து விளக்குகளும் அணைந்து விடுவதாக, அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்த பகுதியில் நள்ளிரவில், இந்த பகுதியில் அனைத்து தெரு விளக்குகளும் அணைக்கப்படுகின்றன.
அந்த நேரத்தில், தெரு நாய்கள் அதிக அளவில் குரைப்பதால், வெளி செல்லும் அச்சமாக உள்ளது. அந்த நேரத்தில், பணி முடித்து நடந்து வருவோர் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிகாலை நேரத்தில் மீண்டும் எரிய விடப்படுவதால், மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதோ என்ற அச்சம் இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
எனவே, இந்த பிரச்னையை தீர்க்க, நகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.