/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை, சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி உற்சவம் மாமல்லை, சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி உற்சவம்
மாமல்லை, சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி உற்சவம்
மாமல்லை, சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி உற்சவம்
மாமல்லை, சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி உற்சவம்
ADDED : மார் 13, 2025 10:37 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், இன்று காலை கருட வாகனத்தில் எழுந்தருளி, கோவிலிலிருந்து புறப்பட்டு தென்மாட வீதி, மேற்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கிழக்கு ராஜ வீதி, ஒற்றைவாடைத் தெரு வழியாக, மீனவ பகுதி கடற்கரையை அடைகிறார்.
அங்கு சிறப்பு வழிபாடு நடத்தி, சுவாமியின் அம்சமான சக்கரத்தாழ்வார், 7:30 மணிக்கு கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உசவம் காண்கிறார்.
சதுரங்கப்பட்டினம்
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், மலைமண்டல பெருமாள் எனப்படும் வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வரதராஜ பெருமாள், மாசி மக தீர்த்தவாரியாக, இன்று காலை கடலில் புனித நீராடுகிறார்.
காலை, சிறப்பு அலங்கார சுவாமி, தேவியருடன் கோவிலில் புறப்பட்டு, கல்பாக்கம் நகரிய நுழைவாயில் பகுதியை அடைகிறார்.
கல்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர், வெங்கடகிருஷ்ணர், ஸ்ரீனிவாசர், மெய்யூர் ஆதிகேசவர், புதுப்பட்டினம் முத்து மாரியம்மன், சதுரங்கப்பட்டினம் அய்யப்பன், விட்டிலாபுரம் பிரேமிக விட்டல பாண்டுரங்கர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி சுவாமியர், அவருடன் இணைவர்.
சதுரங்கப்பட்டினம், மீனவ பகுதிகள் வீற்றுள்ள ஊத்துக்காடு அம்மன் உள்ளிட்ட அம்மன்கள், அவர்களை சீர்வரிசையுடன் வரவேற்று, சதுரங்கப்பட்டினம் கடற்கரையை அடைகின்றனர்.
அதைத்தொடர்ந்து, வரதராஜர் உள்ளிட்டோருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தி அஸ்தராஜர், சக்கரத்தாழ்வாருக்கு வழிபாடு நடத்தி, சக்கரத்தாழ்வார் கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் காண்கிறார்.
திருவிடந்தை
இங்குள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் சக்கரத்தாழ்வார் கடற்கரை சென்று, திருமஞ்சன வழிபாட்டிற்குப் பின், கடலில் நீராடி, சுவாமி தீர்த்தவாரி உற்சவம் காண்கிறார்.