/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆனைக்குன்னத்தில் நாடக மேடை கிராமவாசிகள் வேண்டுகோள் ஆனைக்குன்னத்தில் நாடக மேடை கிராமவாசிகள் வேண்டுகோள்
ஆனைக்குன்னத்தில் நாடக மேடை கிராமவாசிகள் வேண்டுகோள்
ஆனைக்குன்னத்தில் நாடக மேடை கிராமவாசிகள் வேண்டுகோள்
ஆனைக்குன்னத்தில் நாடக மேடை கிராமவாசிகள் வேண்டுகோள்
ADDED : மார் 13, 2025 10:41 PM
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு ஆனைக்குன்னம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு அம்மன் கோவில், சப்த கன்னிகள், முனீஸ்வரன் கோவில், அய்யனாரப்பன் கோவில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் விழாக் காலங்களில் தெருக்கூத்து மற்றும் நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாடக மேடை கட்டடம் இல்லாததால், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து கலைகள் நடத்த முடியாமல், கிராமத்தினர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோடை மழைக்காலங்களில், சிரமப்படுகின்றனர். நாடக மேடை அமைக்க, இப்பகுதி மக்கள் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆனைக்குன்னம் ஊராட்சியில் நாடக மேடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.