/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அப்பார்ட்மென்டில் தகராறு கல்லுாரி மாணவர் 6 பேர் கைது அப்பார்ட்மென்டில் தகராறு கல்லுாரி மாணவர் 6 பேர் கைது
அப்பார்ட்மென்டில் தகராறு கல்லுாரி மாணவர் 6 பேர் கைது
அப்பார்ட்மென்டில் தகராறு கல்லுாரி மாணவர் 6 பேர் கைது
அப்பார்ட்மென்டில் தகராறு கல்லுாரி மாணவர் 6 பேர் கைது
ADDED : மார் 13, 2025 10:36 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், அருகிலுள்ள தனியார் பல்கலை மாணவர்கள் நுாறுக்கும் மேற்பட்டோர் வாடகைக்கு தங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் பல்கலை மாணவர்கள் ஆறு, இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் வந்த போது, அவர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்து விட்டு செல்லும்படி, செக்யூரிட்டிகள் கூறி உள்ளனர்.
இதில் கோபமடைந்த மாணவர்கள், செக்யூரிட்டிகளிடம் சண்டையிட்டு, நுழைவு பகுதி 'கேட்'டை சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்த புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வந்து, மாணவர்களிடம் விசாரித்தனர்.
இதில் அவர்கள், எம்.பி.ஏ., படித்து வந்த வேலுார் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ் குமார்,18, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மேகநாதன்,18, சென்னை அசோக் நகரை சேர்ந்த ரித்திஷ் கிருஷ்ணன்,18, திருச்சியைச் சேர்ந்த அபிஷேக்,18, ராணிப்பேட்டையைச் சேர்ந்த துரை ராஜ்,19, மற்றும் லோகேஷ்வரன்,19, என தெரிந்தது.
மேலும் இவர்கள், மது போதையில் தகராறு செய்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.