/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா
கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா
கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா
கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா
ADDED : மார் 12, 2025 06:52 PM
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 10 நாட்களாக நடத்தப்படுகிறது.
நேற்று, 10ம் நாள் உற்சவமாக தெப்பல் திருவிழா நடந்தது.
இதில், இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், கந்தபெருமான் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளி, சரவண பொய்கையில் ஐந்து முறை வலம் வந்தார்.
முன்னதாக மதியம், கந்தபெருமான் சரவண பொய்கையில் எழுந்தருளி தீர்த்தவாரியாடினார். பின், காவடி மண்டபத்தில் கந்தபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேபோன்று, கொளத்துாரில் உள்ள கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலிலும், மாசிமக தெப்பல் விழா நேற்று நடந்தது.
இரவு 7:00 மணியளவில் கல்யாண ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் தெப்பல் குளத்தில் எழுந்தருளி, ஒன்பது முறை வலம் வந்தார்.