/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திடீர் மழையால் தர்பூசணிக்கு பாதிப்பு திடீர் மழையால் தர்பூசணிக்கு பாதிப்பு
திடீர் மழையால் தர்பூசணிக்கு பாதிப்பு
திடீர் மழையால் தர்பூசணிக்கு பாதிப்பு
திடீர் மழையால் தர்பூசணிக்கு பாதிப்பு
ADDED : மார் 12, 2025 06:53 PM
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் நாம்தாரி, விஷால், டிராகன், என்.எஸ் 295 உள்ளிட்ட பல்வேறு வகையான தர்பூசணி ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளன.
டிச., மாதத்தில் பயிரிடப்பட்ட தர்பூசணி, தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால், தர்பூசணி விலை குறைய வாய்ப்பு உள்ளது,
மேலும் மழையால், செடி நடவு செய்து 30 - 40 நாட்கள் உள்ள செடிகளில், பூ மற்றும் பிஞ்சுகள் கருகி, மகசூல் பாதிக்கப்படும். அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி, தர்பூசணி பழம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதி தர்பூசணி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.