/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஸ்தலசயனர் கோவிலில் இன்று தெப்போற்சவம் ஸ்தலசயனர் கோவிலில் இன்று தெப்போற்சவம்
ஸ்தலசயனர் கோவிலில் இன்று தெப்போற்சவம்
ஸ்தலசயனர் கோவிலில் இன்று தெப்போற்சவம்
ஸ்தலசயனர் கோவிலில் இன்று தெப்போற்சவம்
ADDED : மார் 12, 2025 06:51 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் இன்று தெப்போற்சவம், நாளை கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
மாமல்லபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், இக்கோவில் உள்ளது.
ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், 12 ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். வைணவ சமயத்தின் 108 திவ்ய தேசங்களில், 63வது கோவிலாகவும், நிலம் சார்ந்த தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத பவுர்ணமி நாள் இரவு, புண்டரீக புஷ்கரணி குளத்தில், சுவாமி தெப்போற்சவம் காண்பார். மாசிமக உற்சவமாக மறுநாள் காலை, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, கடற்கரையில் எழுந்தருளி, கடலில் அர்த்த சேது தீர்த்தவாரி உற்சவம் காண்பார்.
இன்று இரவு 8:00 மணிக்கு, தெப்போற்சவம், நாளை காலை 7:00 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவையும் நடைபெறுகின்றன.