/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் மாடுகள் உலா ஒலிபெருக்கியில் எச்சரிக்கை சாலையில் மாடுகள் உலா ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
சாலையில் மாடுகள் உலா ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
சாலையில் மாடுகள் உலா ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
சாலையில் மாடுகள் உலா ஒலிபெருக்கியில் எச்சரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 06:53 AM
திருப்போரூர்,: திருப்போரூர் பேரூராட்சியில் சாலையில் மாடுகளை உலவ விடும் உரிமையாளர்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் பேரூராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இதுகுறித்து, திருப்போரூர் பேரூராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, கால்நடைகளின் உரிமையாளர்கள், மாடுகளை தங்கள் சொந்த இடங்களில் கட்டி வைக்கும்படி, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாகன ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கப்பட்டது.
மேலும், வருவாய் துறையினர், போலீசார் முன்னிலையில், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக, மாடுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.