/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ உத்தமநல்லுார் ஊராட்சியில் நாடக மேடை கட்ட பூமி பூஜை உத்தமநல்லுார் ஊராட்சியில் நாடக மேடை கட்ட பூமி பூஜை
உத்தமநல்லுார் ஊராட்சியில் நாடக மேடை கட்ட பூமி பூஜை
உத்தமநல்லுார் ஊராட்சியில் நாடக மேடை கட்ட பூமி பூஜை
உத்தமநல்லுார் ஊராட்சியில் நாடக மேடை கட்ட பூமி பூஜை
ADDED : ஜூலை 22, 2024 06:54 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியம், திருமுக்காடு ஊராட்சிக்குட்பட்ட உத்தமநல்லுாரில், நாடக மேடை கட்டும் பணிக்காக, கடந்த வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடந்தது.
உத்தமநல்லுாரில், நாடக மேடை அமைக்க, அப்பகுதி மக்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சி நிதி, 2024- - 25ன் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உத்தமநல்லுார் நியாய விலைக் கடை அருகே, நாடக மேடை கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
இந்நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், திருமுக்காடு ஊராட்சி தலைவர் பெருமாள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.