ADDED : ஜூலை 22, 2024 06:55 AM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், இப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில், இரண்டு வகுப்பறைகளுடன், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
கடந்த வெள்ளியன்று, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி கட்டடத்தை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அனாமிகா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.