/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூட்டுறவு சங்க இருளர்கள் பாம்பு பிடிக்கும் பணி துவக்கம் கூட்டுறவு சங்க இருளர்கள் பாம்பு பிடிக்கும் பணி துவக்கம்
கூட்டுறவு சங்க இருளர்கள் பாம்பு பிடிக்கும் பணி துவக்கம்
கூட்டுறவு சங்க இருளர்கள் பாம்பு பிடிக்கும் பணி துவக்கம்
கூட்டுறவு சங்க இருளர்கள் பாம்பு பிடிக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 22, 2024 06:56 AM

மாமல்லபுரம்: தமிழக தொழில், வணிக துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது.
அதற்கு அரசு உரிமம் வழங்கி, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் பாம்பு பிடிக்கவும், உரிமம் வழங்கப்படுகிறது.
நல்லபாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட வகை பாம்புகளிலிருந்து, குறிப்பிட்ட அளவில் விஷம் பிரித்தெடுத்து, பாம்புகடி விஷமுறிவு மருந்து தயாரிக்க, மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. உறுப்பினர் பிடித்து வரும் பாம்பின் வகைக்கேற்ப, அவர்களுக்கு தொகை அளிக்கப்படுகிறது.
ஓராண்டில், ஏப்., துவங்கி ஆக., வரை, பாம்புகளின் இனப்பெருக்க காலம். எனவே, இக்காலத்தில் பிடிக்காமல் தவிர்க்கப்படும். கடந்த ஏப்., 21ம் தேதி முதல் பாம்பு பிடிப்பது தவிர்க்கப்பட்டது.
தமிழக அரசு, 3,500 சுருட்டைவிரியன், 750 கட்டுவிரியன் ஆகிய பாம்புகள் பிடிக்க, கடந்த மாதம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும், நல்லபாம்பு மற்றும் கண்ணாடிவிரியன் பாம்புகள் பிடிக்க, மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, வெப்பம் தணிந்த சூழலில், இருளர்கள் பாம்பு பிடிக்க துவங்கியுள்ளனர். நேற்று முன்தினம், பாம்புகளுடன் வழிபட்டு, பாம்பிலிருந்து விஷம் பிரித்தெடுக்கும் பணி துவக்கப்பட்டது.